என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது

    • புதுவை மறைமலை அடிகள் சாலையில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் வீச்சரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் தனியார் எலக்ட்ரிகல்ஸ் கடை அருகே ஒரு வாலிபர் அவ்வழியே செல்லும் பொதுமக்களை வீச்சரிவாளை காட்டி மிரட்டுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரிடம் இருந்து வீச்சரிவாளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த தண்டபாணி (வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×