என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாலம் அமைக்கும் பணி -கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ராசு உடையார் தோட்டத்தில் பாலம் அமைக்கும் பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    பாலம் அமைக்கும் பணி -கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • அனுமதி கிடைத்தும் ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அதிகாரியிடம் கேட்டார்.
    • பாலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட உடையார்த் தோட்ட த்தில் சமுதாயநலக்கூடம் கட்டும் பணியினை உடனே தொடங்கி சிறப்பான முறையில் கட்டித்தர வேண்டும் என்றும் ராசுஉடையார்தோட்டம், பிரான்சுவா தோப்பிலும் கழிப்பிடத்தை நவீனமாக்கும் பணிகளை தொடங்கி வைக்கவேண்டும் என்றும் அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. கூறினார்.

    மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் அனுமதி கிடைத்தும் ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை என்று அதிகாரியிடம் கேட்டார்.

    கோலாஸ் நகர்,ராசு உடையார் தோட்டத்தில் உள்ள ப வடிவ வாய்க்காலை தூர்வாரி அதனை புதுப்பித்து மக்கள் தொந்தரவு இல்லாத நடைபாதையை பயன்படுத்தும் படி அதனை சீரமைக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    நகராட்சி மூலம் நடக்க இருக்கும் அனைத்து பணிகளையும் மிக விரைவில் செய்து கொடுக்கும்படியும் மேலும் ராசு உடையார் தோட்டத்திற்கு போடப்படும் பாலங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    வீரர்வெளி, பெரிய ப்பள்ளி ரெயில்வே பாலம் வழியாக உப்பனாறு செல்லும் வாய்கால்களையும் தூர்வாரி சுத்தம் செய்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    Next Story
    ×