search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை
    X

    சிமெண்டு சாலை பணியை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை

    • கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    • விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்புப் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை கடந்த ஆகஸ்டு மாதம் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தற்போது இப்பணி நடைபெற்று வருகிறது. இதனை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் தற்போது மழைக்காலம் என்பதால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    நிகழ்ச்சியின் போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், அர்த்தனாரி, பிரபாகரன், மன்சூர், இருதயராஜ், ராகேஷ், பஸ்கல், ரகுமான், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×