என் மலர்
புதுச்சேரி
குற்றவாளிகளுக்கு ஆதரவான போலீசார் மீது நடவடிக்கை-கலெக்டர் மணிகண்டன் எச்சரிக்கை
- 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது.
- காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டன் போலீஸ் அதிகாரிகளிடையே பேசியதாவது:-
தமிழகம்,ஆந்திரா, கேரளா ஆகிய 3 மாநிலங்களை புதுவை இணைந்து உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை நடத்தப்படுகிறது. அமைதியாக இருக்கும் புதுவையில் கடந்த சில நாட்களாக சமூக விரோத சக்திகளின் செயல்பாடு அதிகரித்துள்ளது.
காவல்துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகள் காணப்படுகிறது. இதனால் போலீஸ் சூப்பிரண்டுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு ரவுடிகளுக்கும் புதுவையில் இடம் இல்லை. குற்றம் இழைக்க கூடிய நபர்களுக்கு ஆதரவாக காவல் துறை அதிகாரிகள் செயல்பட கூடாது. சிலர் குற்றவாளிகளை வெளியே விடும் வகையில் முதல் தகவல் அறிக்கையை எழுதுவதாக புகார் வருகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நானே பரிந்துரை செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.