search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநாடு
    X

    கோப்பு படம்.

    மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநாடு

    • மீனவர் விடுதலை அமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
    • மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பு சார்பில் மீனவர்களுக்கு இ.பி.டி. இடஒதுக்கீடு பலன்கள், பாதிப்புகள், தீர்வு குறித்து ஆய்வரங்கள் தமிழ்ச்சங்கத்தில் நடந்தது.

    புதுவை மாநில அமைப்பாளர் மலையா ளத்தான், முதன்மை செயலாளர் சக்திவேல் வரவேற்றனர். தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவன தலைவர் மங்கையர்செல்வன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நடராஜன், நாகராஜ், இளங்கோவன் ஒருங்கிணைத்தனர். திருமுகம், செல்வம், வெங்கடேசன், ரமேஷ், அருணாச்சலம், ஞானமணி, மாறன், கார்த்திகேயன், முருகன், செந்தில்நாதன், பன்னீர்செல்வம், கனகராஜ் உட்பட பலர் கருத்துரை வழங்கி பேசினர். நகர செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

    புதுவை மக்கள் தொகையில் 3-வது பெரும்பான்மை சமூகமாகவும், ஆண்டுக்கு ரூ.300 கோடி வருமானம் ஈட்டித்தரும் மீனவ சமூகத்திற்கு புதுவை அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 2 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்குகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது. அதீத பிற்படுத்தப்பட்டோர் என மீனவ சமுதாயத்தை அங்கீகரித்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை மீனவ சமுதாயத்தினர் பெற முடியாத நிலையை அரசு உருவாக்கி வஞ்சித்து வருகிறது.

    எனவே கல்வி, வேலைவாய்ப்பில் மீனவ சமுதாயத்துக்கு 7.5 சதவீத இடஒதுககீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21-ந் தேதி உலக மீனவர் நாளில் இடஒதுக்கீடு மாநாடு நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அனைத்து மீனவ கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், விசைப்படகு உரிமையாளர்கள், பைபடர் படகு உரிமையாளர்கள், மீன் அங்காடி மகளிர் நிர்வாகிகள் உட்பட மீனவ சமுதாயத்தை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×