search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பத்திர பதிவு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    பத்திர பதிவு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • பேராசிரியர் ராமதாஸ் வலியுறுத்தல்
    • புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை வம்பாக்கீரப்பாளையம் சன்னியாசித்தோப்பில் பல ஆண்டுகளாக மீனவர்கள் பயன்பாட்டிலும் பராமரிப்பிலும் இருந்து வந்த பரமேஸ்வரி கோவில் திடலை சிலர் திட்டமிட்டு அபகரித்துள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நீண்ட காலமாக இல்லாமல் திடீரென்று எப்படி 4 பேர் இந்த இடத்திற்கு பத்திரம் பதிந்து திடல் அவர்களுக்கு சொந்தம் என்று கொண்டாட முடியும் என்பதை இந்த அரசுதான் விளக்க வேண்டும்.

    புதுவையில் தொடர்ந்து வீடு மற்றும் நிலம் அபகரிக்கும் கும்பல்தான் இந்த காரியத்தை செய்கிறார்கள். இதனை புதுவையின் அதிகார வர்க்கத்தின் துணையும் உதவியும் இல்லாமல் செய்திருக்க முடியாது .

    ஏழை மீனவ சமுதாயத்தின் நிலத்தை அபகரித்தால் இதைத் தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் இந்த காரியம் நடைபெற்று உள்ளது. புதுவையில் பல்வேறு பகுதிகளில் இருந்த சீமான் செல்வராஜ் செட்டியாரின் சொத்தை அபகரித்து புதுவையில் இன்று பலர் கோடிஸ்வரர்களாக உருவாகி உள்ளனர்.

    சுற்றுலாவை வளர்க்கி றோம் என்று மீனவர்கள் பயன்படுத்தும் கடற்கரை சூறையாடப்பட்டு வருகிறது. அரசு இந்த சட்ட விரோத காரியங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வம்பாக்கீரப் பாளை யத்தில் நடந்துள்ள அபகரிப்பு சம்பந்தமாக அரசுத்துறைகள் சரியான நடவடிக்கை எடுக்காது. எனவே இந்த விஷயத்தை புதுவை சி.பி.சி.ஐ.டி விசாரித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க சொல்ல வேண்டும்.

    நில அளவைத் துறை மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் நில அபக ரிப்புக்காக தனியாருக்கு பத்திரம் தயார் செய்து கொடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.இந்த இட அவகரிப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தி ருக்கிறார்கள் என்பது உண்மையானால் அது வெட்கக்கேடானது.

    இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புதுவையில் இடம் மற்றும் வீடுகள் அபகரிப்பு தொடர்கதை யாக இல்லாமல் முடிவுக்கு வர அரசில் இருப்பவர்கள் இந்த குற்றத்தை செய்தவர்களை காப்பாற்ற முயன்றால் அவர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.

    குற்றம் செய்தவர்களை மக்கள் முன் நிறுத்த வேண்டியது ஒரு நியாயமான அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×