என் மலர்
புதுச்சேரி

டெங்கு விழிப்புணர்வு பேரணியை கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி.
டெங்கு விழிப்புணர்வு பேரணி
- நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
- புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் கவுண்டன் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று டெங்கு நோயை விரட்டுவோம்.
டெங்கு கொசுவை ஒழிப்போம், மழை நீர் தேங்காாமல் தடுப்போம், கொசுக்களை ஒழிப்போம் டெங்கு வராமல் தடுப்போம் போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






