என் மலர்
புதுச்சேரி

நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்ற காட்சி.
நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்
- உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
- இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு தலைமை நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.ஆர்.வித்யா நீரிழிவு நோய் வராமல் காப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வந்தபின் அதை கட்டுக்குள் வைத்து நீண்ட நாட்கள் வாழும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார்.
முகாமில் கலந்து க்கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்து பயனாளிகளுக்கு எம்.ஆர்.வித்யா, இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு, மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆகியோர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.
இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.






