என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயிற்காப்பீட்டு திட்ட விழாவை விவசாயிகள் புறக்கணிப்பு
    X

    விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பயிற்காப்பீட்டு திட்ட விழாவை விவசாயிகள் புறக்கணிப்பு

    • மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், காலத்தோடு பயிர் காப்பீடு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் உண்டான பயிர் காப்பீட்டு தேதியை வெளிப்படையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

    வேளாண்துறை அதிகாரியை உடனடியாக மாற்றக் கோரியும் விவசாயிகள் நிகழ்ச்சியை புறக்கணித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×