என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா
    X

    அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா அரசு செயலர் அருண் கலந்து கொண்டு பேசினார். அருகில் கல்லூரியின் நிர்வாகிகள் உள்ளனர்.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா

    • அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கும் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்கள் அறிமுக விழா மற்றும் துவக்க விழா நடைபெற்றது. அரியூர் ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரன் வழி காட்டலின் படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா, முதன்மை இயக்க அதிகாரி டாக்டர்.வித்யா, பொது மேலாளர் சௌந்தர்ராஜன், டீன் துரைவேல், முதல்வர் சரோஜினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுவை அரசு செயலர் டாக்டர் அருண் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுவை மதர்தெரேசா பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கோபால், சென்னை ரெகுலேட்டரி கார்ப்பரேஷன் டேப்லெட்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர்.சதீஷ் ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை பாராட்டி பேசினார்கள். வெங்கடேஸ்வரா பார்மசி கல்லூரி இணை பேராசிரியர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இணை பேராசிரியர் சென்னியப்பன் நன்றி கூறினார்.

    Next Story
    ×