என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தனியார் மருத்துவமனைகளில் அரசு டாக்டர்கள் சிகிச்சை செய்ய தடை விதிக்கப்படும்
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை
- தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை அரசின் சுகாதாரத்துறை, ரோட்டரி கிளப் பிரைடு அமைப்பு இணைந்து புற்றுநோயை கண்டறிய 3 நாள் முகாம் நடத்துகிறது.
முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-
கேன்சருக்காக புரோட்டான் என உயர் ரக சிகிச்சை தரப்படுகிறது. இதன் மூலம் ஆரம்பத்தி–லேயே சிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோயை சரி செய்யலாம். புதுவையில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். கேரளா–வில் பரவும் நிபா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது.
மாகியில் தடுப்பு நடவடிக்கை எடுத்துள் ளோம். முககவசம் அணிய கோரிக்கை வைத்துள்ளோம். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளோம். கொரோனா அளவுக்கு பரவக்கூடாது. பஸ்கள், விமானம், ரெயில் பயணிகளிடம் அறிகுறி இருக்கிறதா என்பதை கண்காணிக்கிறோம்.
டெங்கு ஒழிப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். 2 பேர் உயிரிழக்குப் பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை ஏற்க முடியாது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து அரசுக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை.
உடலுக்குள் ரத்தகசிவு டெங்கு பாதிப்பால் ஏற்படும். நோய் அறிகுறி வந்தவுடன் மக்கள் முன் எச்சரிக்கையுடன் மருத்துவ மனைக்கு வரவேண்டும். முன்னர் நடந்த உயிரிழப்பு கள் கவலை தரக்கூடியது தான். இனிமேல் யாருக்கும் பாதிக்கப்படக்கூடாது. டெங்கு பொருத்தவரை காலதாமதம் செய்வது காலனை வரவழைக்கும்.
தமிழகத்தில் ஆயிரம் குடமுழுக்கு செய்ததாக சொல்லியுள்ளார்கள். அதில் எத்தனை குட முழுக்கில் முதல்-அமைச்சர் சென்று கலந்து கொண்டார்? என கேட்கிறேன். இப்படி கேட்டால், தமிழகத்தை பற்றி பேச தமிழிசைக்கு தார்மீக உரிமை இல்லை என்கிறார்கள். தமிழகத்தின் சார்பாக இரு மாநில கவர்னராக இருக்கும் எனக்கு உரிமை இல்லா விட்டால், வேறு யாருக்கு உரிமை உள்ளது. உரிமை என்பதில் என்ன அளவுகோல் வைத்துள்ள னர்?
புதுவை சுகா தாரத்துறை உயர் பொறுப் பில் உள்ள டாக்டர்கள் தனியார் மருத்துவமனை யிலும், தனியாகவும் சிகிச்சை அளிக்கின்றனர். அரசு மருத்துவ மனைக்கு அவர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும். தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு தாமதமாக வருவது, ஆபரேஷனை தனக்கு தெரிந்த இடத்தில் மாற்று வது உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியு ள்ளோம். தனியார் மருத்துவ மனை யில் கவனம் செலுத்த விரும்பினால் அங்கு சென்று சிகிச்சை தரட்டும். மக்கள் பாதிக்கப்பட்டால், அரசு டாக்டர்கள் தனியார் மருத்து வமனையிலோ, தனியாகவோ சிகிச்சை செய்வதை தடை செய்ய தயங்க மாட்டோம். இதை தொலை நோக்கு திட்டமாக வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்