என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
அரசு பள்ளி மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்
- பா.ஜனதா வலியுறுத்தல்
- கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்து அதில் தோல்வியடைந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றியடைய கல்வித் துறை மீண்டும் தேர்வுகள் நடத்துகிறது.
ஆனால் ஆசிரியர்கள் வழிகாட்டு தலின்றி மாணவர்களால் தேர்வு எழுதி வெற்றி அடைவது என்பது மிகவும் கடினம். எனவே அரசு பள்ளியில் ேதால்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத தயாராக தனியார் கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த கட்டணத்தை செலுத்த முடியாத பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே புதுவை அரசு தோல்வி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அதே பள்ளியில் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.