என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
வக்கீலை பீர்பாட்டிலால் தாக்கு
- மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர்.
புதுச்சேரி:
மோதலை தடுக்க முயன்ற வக்கீலை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர் அருகே ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் கவியரசன் (வயது33). இவர் புதுவை கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கவியரசன் கோர்ட்டில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட தயாரான போது அவரது நண்பரும், வக்கீலுமான மணிகண்டன் என்பவர் கோர்ட்டு எதிரே ரோடியர் மில் திடலில் தனது கட்சிக்காரரை சந்தித்து பேசிவிட்டு செல்லலாம் என்று அழைத்ததின் பேரில் மணிகண்டனுடன் கவியரசன் ரோடியர் மில் திடலுக்கு சென்றார்.
அங்கு மணிகண்டனின் கட்சிக்காரரான சசியுடன் மேலும் 3 நபர்கள் இருந்தனர். அவர்களிடம் மணிகண்டன் வழக்கு சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது மணிகண்ட னுக்கும் அவரது கட்சிக்காரர் சசிக்கும் பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு நடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் மணிகண்டனை சசி தாக்க முயன்றார். இதையடுத்து கவியரசன் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த சசி மற்றும் அவரது கூட்டாளிகள் வக்கீலுக்கு வக்கீல் ஆதரவாக பேசுகிறாயா? என கூறி கவியரசனை கையால் தாக்கினர்.
மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து கவியரசனை தலையில் சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சசி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த கவியரசனை அவரது நண்பர் மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்.
பின்னர் இதுகுறித்து கவியரசன் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.