search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் கடல் நீரில் குளிக்க நேரிடும்-மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் ரமேஷ் பேச்சு
    X

    கருத்தரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

    தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் கடல் நீரில் குளிக்க நேரிடும்-மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலர் ரமேஷ் பேச்சு

    • தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும்.
    • குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    புதுச்சேரி:

    புதுவையில் உலக தண்ணீர் தின கருத்தரங்கில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசியதாவது:-

    தேசிய அளவில் சராசரி தனிமனிதன் தினசரி உபயோகிக்கும் தண்ணீரின் அளவு 135 லிட்டர் ஆகும். புதுவையில் இது இருமடங்காகும்.

    பிற மாநிலங்களில் போல் இல்லாமல் புதுவையின் தண்ணீரின் பயன்பாடு 100 சதவீதம் நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது.

    இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கடல் நீர் குடிநீரில் கலந்து வருகிறது. இதனை உணர்ந்து நாம் உடனடியாக தண்ணீர் சிக்கனத்தை கடைப்பிடிக்காவிடில் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் நகரத்தை போல் குளிப்பதற்கு கடல்நீரை பயன்படுத்த வேண்டிய சூழல் புதுவைக்கு ஏற்படும். குழாயை திறந்துவிட்டு பல்துலக்குவதால் ஒரு மனிதன் ஒரு வருடத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீரை வீணாக்குகிறான்.

    இதனால் 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவு நீர் உற்பத்தி ஆகுகிறது. குவளை நீரில் பல்துலக்கினால் பெருமளவில் தண்ணீரை சேமிக்கலாம். நமது முன்னோர்கள் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக புதுவையில் 88 ஏரிகள், 450 குளங்கள் அமைத்தனர்.

    மணக்குள விநாயகர் கோவில், குளக்கரையில் கட்டப்பட்டது. எதிர்கால சந்ததியருக்கு நாம் விட்டு செல்லும் சொத்து பாதுகாப்பான குடிநீராக இருக்க வேண்டும் என்றார். கருத்தரங்கில் பல்கலைக்கழக பேராசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×