search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஒருங்கிணைந்த தேசிய கருத்தரங்கம்
    X

    அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஒருங்கிணைந்த தேசிய கருத்தரங்கம் நடந்த காட்சி.

    ஒருங்கிணைந்த தேசிய கருத்தரங்கம்

    • தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் பல்கலைக்கழத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சுகாதார அறிவியல் பிரிவில் பல துறைகள் ஒருங்கிணைந்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் வழி காட்டுதலின் படி ஏற்பாட்டில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துறையின் டீன் செந்தில்குமார் வரவேற்று நோக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதிர் தலைமை தாங்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக சென்னை ஸ்ரீராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கதிரியக்கவியல் பேராசிரியர் பன்னீர்செல்வம், சென்னை அப்பல்லோ மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆேலாசகர் அனில்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    கருத்தரங்கில் ஆராய்ச்சி குறிப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. செயல்முறை பயிற்சியினை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கண் ஒளியில் பிரிவின் பொறுப்பாளர் பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் அஜித்குமார், சுபாஷினி ஆகியோர் அளித்தனர்.

    கருத்தரங்கில் மாணவர்களுக்கான ஆராய்ச்சி கட்டுரை, இணைய பட விளக்கம் காட்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறை உதவி பேராசிரியர்கள் திபீகா, வெங்கடேசன், இன்பசாகர், கலைவாணி, சிலம்பரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×