என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
எம்.ஐ.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கம்
- புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.
- புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தா ள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) மற்றும் புதுவை மாநில மையத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் கணினி பொறியியல் பிரிவு வாரியதுடன் இணைந்து "எஸ்.டி.ஜி.13-க்கான சவால்கள் மற்றும் தணிப்பு உத்திகள்: ஐ.ஒ.டி.யின் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் 2 நாட்கள் அகில இந்திய கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண் வாழ்த்திப் பேசினர்.
இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் டாக்டர் எழிலரசன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் தாக்கங்கள், தழுவல் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
டாக்டர் லோகநாதன் மற்றும் கணினி பொறியாளர்கள் பிரிவு வாரியம் பங்கேற்றார்.
கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பூங்குழலி மற்றும் டாக்டர் ராஜலட்சுமி மற்ற பணியாளர்களுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினீயரிங் துறை டாக்டர் விஜயகுமார் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.
காலநிலை மாற்றங்கள் குறித்து மாணவர்களால் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறந்த கட்டுரை களுக்கு ரொக்க ப்பரிசு மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.