search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சமூக நீதிக்கான ரியல் ஹீரோவாக மோடி திகழ்கிறார்
    X

    பழங்குடியின மக்களுடன் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசிய காட்சி.

    சமூக நீதிக்கான ரியல் ஹீரோவாக மோடி திகழ்கிறார்

    • மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு
    • அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த பழங்குடியினர் கவுரவப்படுத்தும் விழாவில் பழங்குடியினரை தரையில் அமர வைத்த விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது.

    இந்த நிலையில் புதுவை லாஸ்பேட்டை விவேகா னந்தா பள்ளி வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் பா.ஜனதா சார்பில் பழங்குடி சமூக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுவை பா.ஜனதா மாநில தலைவர் செல்வ கணபதி எம்.பி. தலைைம தாங்கினார்.

    நிகழ்ச்சியில், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார் அசோக் பாபு எம்.எல்.ஏ, ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    பழங்குடியின சுதந்திரப் போராட்ட தியாகி மிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ந்் தேதி பழங்குடியின மக்களின் கவுரவ தினமாக பிரதமர் மோடி கொண்டாடி னார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்காக திட்டங்களை தொடங்கி வைத்தார். யார் யாரெல்லாம் சமூக நீதி பேசும் இங்கு சமூக நீதி காக்கும் ரியல் ஹீரோவாக பிரதமர் மோடி விளங்குகிறார்.

    பா.ஜனதா ஆட்சிக்கு வந்த உடன் சிறுபான்மை யினர் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் கலாமை குடியரசு தலைவரானது 2014-ல் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவரானது, மீண்டும் 2019 மோடி தலைமையிலான ஆட்சியில் நமக்காக பழங்குடியின மக்களுக்காக பேசக்கூடிய வகையில் பழங்குடியின மக்களில் ஒருவரான திரவுபதி முர்மு ஒருவரை பா.ஜனதா அரசு குடியரசு தலைவராகி பெருமைப்படுத்தி உள்ளது.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது பழங்குடி யினருக்கான தனி ஆணை யம் அமைக்கப்ப ட்டது. பிரதமர் மோடி ஒரு கோடியே 25 லட்சம் பழங்குடியின வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்துள்ளார். 1.5 கோடி பழங்குடியின வீடுகளுக்கு கழிவறையும், 50 லட்சம் பேருக்கு வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. 95 லட்சம் பழங்குடி யின மக்கள் விவசாய தொகை பெறுகின்றனர்.

    ரத்த சோகை அதிகம் உள்ள பழங்குடியின மக்களின் 58 லட்சம் பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு மேலும் 7 கோடி பேருக்கு இந்த பரிசோதனை நடக்க உள்ளது. பழங்குடியின மாணவர்கள் கல்வி பெறவும் வெளிநாடுகளில் தங்கி படிக்கவும் 17 ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. 111 மாணவர்கள் வெளிநாட்டில் தங்கி படிக்கும் நிலையை மோடி அரசு உருவாக்கி உள்ளது.

    மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடியின மக்கள் படிப்பதற்காக நாடு முழுவதும் 401 பள்ளிகள் ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்பட்டு 1.5 லட்சம் மாணவ மாணவிகள் அங்கு தங்கிப் படித்து வருகின்றனர்.

    நாடோடிகளாக செல்லும் பழங்குடியின மக்களுகளின் நலனை க் காக்க பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி மிர்சா முண்டா போன்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10 சுதந்திர போராட்ட வீரர்க ளுக்கு அருங்காட்சியகம் அமைத்துள்ளார்.

    நான் எஸ்.சி. கமிஷனில் பணியாற்றிய போது புதுவை சேர்ந்த பழங்குடி யின கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் என்னிடம் வந்து புதுவையில் உள்ள பழங்குடி யின மக்களின் நலனுக்காக கோரிக்கைகளை வைத்தார். உடனே எஸ்.டி. கமிஷன் அதிகாரிகள் அழைத்து நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக இருந்தேன்.

    புதுவையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எம்.பி. செல்வகணபதி பல்வேறு வகையில் உதவி களை செய்து வருகிறார்.

    இதேபோல் நம்முடைய சபாநாயகர், அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் நிச்சயம் பழங்குடியின மக்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

    இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் எல். முருகனி டம் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் மத்திய மந்திரி எல்.முருகன், சபாநாயகர், அமைச்சர்கள், எல்.எல்.ஏ.க்கள் உணவு அருந்தினர்.

    Next Story
    ×