என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விவசாயிக்கு மிரட்டல் விடுத்த தாய்- மகன்கள்
    X

    கோப்பு படம்

    விவசாயிக்கு மிரட்டல் விடுத்த தாய்- மகன்கள்

    • தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்
    • இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் முத்துமுதலியார் நகர், சிங்கார கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). இவர் டி.என். பாளையத்தில் பரமசிவம் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதே நிலத்தை ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஆதிகேசவன் என்பவர் குத்தகை வைத்திருந்ததால் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கணேசன் பராமரித்து வந்த தென்னங்கன்றுகளை ஆதி கேசவனுடைய தாயார் கிருஷ்ணவேணி ஆடுகளை கொண்டு மேய்த்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக கணேசன், ஆதிகேசவனிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆதிகேசவன் அவரது சகோதரர் ராமதாஸ், தாயார் கிருஷ்ணவேணி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் உதவி சப் -இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×