என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மது கடைகளை ஏலம் விட்டு பாப்ஸ்கோ மறுசீரமைப்பு
- புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர்.
- இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமாருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தவாறு அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் முயற்சியால் 1000 பாப்ஸ்கோ தொழிலாளர்களின் வங்கி கணக்கில் 3 மாதம் சம்பளம் செலுத்தப்பட்டது.இதனையடுத்து உறுதி அளித்தவாறு தீபாவளிக்கு முன்னதாக சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்த அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமாரை ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் சேது செல்வம், மற்றும் ஊழியர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
அப்போது, பாப்ஸ்கோவில் உள்ள 33 மதுபான கடை உரிமங்களை டெண்டர் முறையில் ஏலம் விட்டு 2 மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வ தென்றும், ஊழியர்கள் ஊதியம் பட்டுவாடா செய்வது, அனைத்து கடன்களையும் தீர்ப்பது என அமைச்சர் சாய்.ஜெ.சரவணகுமார் உறுதி அளித்தார்.