என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
பொதுமக்களை அச்சுறுத்தும் விஷ குளவி கூடுகள்
Byமாலை மலர்14 Sept 2023 10:52 AM IST
- பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர்.
- அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி:
குச்சிபாளையம் பகுதியில் மதகடிப்பட்டு-திருக்கனூர் செல்லும் சாலையில் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷ குளவிகள் அங்குள்ள ஆலமரத்தில் 2 இடங்களில் கூடு கட்டி உள்ளது.
இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர். மேலும் திருபுவனை, சன்னியாசி குப்பம் ஆகிய பகுதி மக்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர்.
அவ்வப்போது விஷக்குளவிகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×