search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நர்சுகளுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை
    X

    கோப்பு படம்.

    நர்சுகளுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை

    • 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.
    • நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சுகாதாரத்துறை 105 நர்சு பணி இடங்களை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவது சம்பந்தமாக அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது.

    இப்பணிக்கு வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், புதுவை அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே சுகாதாரத்துறை மூலம் கொரோனா தொற்று காலத்தில் பணி அமர்த்தப்பட்ட தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த நர்சுகள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணியாற்றினர்.

    மத்திய அரசு கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த டாக்டர், நர்சு மற்றும் உதவியாளர்களுக்கு தக்க சன்மானமும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கியுள்ளது.

    ஆகையால், தற்போது நிரப்பப்பட உள்ள நர்சு பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் கொரோனா காலத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய நர்சுகளுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கான இடங்களை நிரப்பவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×