என் மலர்
புதுச்சேரி

புதுவை சட்டசபையில் இருந்து தி.மு.க.- காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காட்சி
புதுவை சட்டசபையில் தி.மு.க. - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
- கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
- புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் தமிழிசை உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. - காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
கவர்னர் தமிழிசை உரை நிகழ்த்த தொடங்கியதும் அவரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். ஆனால் கவர்னர் தமிழிசை தொடர்ந்து உரை நிகழ்த்தினார். நாளை மற்றும் நாளை மறுநாள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. இதில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள்.
புதுவை சட்டசபையில் வருகிற 17-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.






