என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரி சிறுமி கொலை குற்றவாளிகளிடம் போலீஸ் காவலில் விசாரணை
- கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.