என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
டெல்லியில் புதுவை உணவுத்திருவிழா
- அமைச்சர் லட்சுமிநாராயணன் பங்கேற்பு
- உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
புதுச்சேரி:
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் பல்வேறு மாநில, யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து உணவுத் திருவிழாவை டெல்லியில் நடத்தியது.
கடந்த 18-ந் தேதி தொடங்கி வரை நடக்கும் உணவு திருவிழா வில் புதுவை அரசு சார்பிலும் உணவு, கைவினை கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றன.
முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின்படி அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்த உணவுத் திருவிழா மற்றும் கைவினை கண்காட்சியில் பங்கேற்று பல மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
உணவு திருவிழாவுக்கு வந்திருந்தவர்கள் புதுவை சார்பில் காட்சிப்படுத்த ப்பட்டிருந்த பிரெஞ்சு, தமிழ் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
புதுவையின் பாரம்பரிய கைவினை, நடன கலைகளையும் கண்டு ரசித்தனர். கண்காட்சியில் இணை ஆணையர் ரவிதீப்சிங் சாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியின் மூலம் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.