search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காவல்துறையை  நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதி
    X

    கோப்பு படம்.

    புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதி

    • சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.
    • புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலை–மையில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். சிந்தன் ஷிவிர் என்ற பெயரில் ஹரியானாவின் சூரஜ்குந்த் என்ற இடத்தில் மாநாடு தொடங்கியது.

    மாநாட்டில் மாநில உள்துறை செயலர்கள், டி.ஜி.பி.க்கள், ஆயுதப்படை இயக்குனர்கள், மத்திய போலீஸ் அமைப்புகளும் பங்கேற்றனர். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் ராஜீவ்வர்மா,டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோர் பங்கேற்ற–னர். தொடங்கிய மாநாட்டில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வலியுறுத்தி–யதாவது:-

    புதுவை காவல்துறையை நவீனப்படுத்த ரூ.63 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். காவல்துறைக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்க மத்திய உள்துறை அனுமதி வழங்க வேண்டும். புதுவையின் 4 பிராந்தி–யங்க–ளும் கடலோர பகுதியை உள்ளடக்கியவை.

    எனவே புதுவை மாநில கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதுவை மாநில கடலோர காவல்படையை விரிவுபடுத்த வேண்டும். கடலோர காவல்படையில் ஊர்க்காவல்படையினரை நியமிக்க வேண்டும்.

    போதை கடத்தல் நாடு முழுவதும் பிரச்சினையாக உள்ளது. புதுவையில் போதை தடுப்பு தனி பிரிவை பலப்படுத்த வேண்டும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சைபர் கிரைம் பிரிவை நவீனப்படுத்தி குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன கருவிகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

    2-ம் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி, வீடியோ கான்ப–ரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.

    Next Story
    ×