என் மலர்
புதுச்சேரி

புதுவை நகர பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி.
புதுவையில் மழை வெள்ளம் சூழ்ந்தது
- தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
- 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை முதல் தொடங்கியது.
மழை வருகிற 4-ந் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
அதன் காரணமாக புதுவையில் 3 மணியிலிருந்து நகர பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணிநேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக நகரப் பகுதியில் வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர்,வெங்கட்டா நகர், செல்லான் நகர், இளங்கோ நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாததால் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கி நின்றது. 5 மணிக்கு மழை நின்றாலும் 7 மணி வரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து இருந்தது.
8 மணிக்கு முழுமையாக வடிந்தது.ரெயின்போ நகரில் சிறிய மழைக்கு கூட நீர் தேங்குவதை தடுக்க ரூ.10 கோடி மதிப்பில் பொது பணித்துறை சார்பில் சில நாட்களுக்கு முன் தான் பணி தொடங்க பூமி பூஜை போடப்பட்டது என்பது குறிப்பிட தக்கது.






