என் மலர்
புதுச்சேரி
மக்கள் பிரச்சினைக்கு சிறப்பு கவனம்- புதிய டி.ஜி.பி. பேட்டி
- புதுவை டி.ஜி.பி. யாக கடந்தாண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர், நேற்று மாலை டி.ஜி.பி.யாக பதவியேற்றார்.
புதுச்சேரி:
புதுவை டி.ஜி.பி. யாக கடந்தாண்டு பொறுப்பேற்ற ரன்வீர் சிங் கிருஷ்ணியா டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு புதுவைக்கு வந்த அவர், நேற்று மாலை டி.ஜி.பி.யாக பதவியேற்றார். அவரை டி.ஜி.பி. இருக்கையில் ரன்வீர் சிங் கிருஷ்ணியா அமர வைத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.
முன்னதாக அவருக்கு காவல்துறை தலைமையகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இன்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு பல வரலாறு உள்ளதால் மகிழ்ச்சி அளிக்கிறது. அமைதியான முறையில் புதுவை மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆன்மீகம் மற்றும் பல வரலாற்றை புதுவை கொண்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன்.
துய்மையான புதுவைக்கு மக்கள் உறுதுணையாக உள்ளனர். மக்களுக்கு காவல்துறை துணையாக இருக்கும். புதுவையில் ரவுடிகளை ஒடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா நடமாட்டத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரச்சினை–களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.