என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
சிறப்பு ரத்ததான முகாம்
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.
- சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம், செந்நாடா சங்கம், விழுப்புரம் லயன்ஸ் சங்கம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி இணைந்து இந்திய சுதந்திர 75-வது ஆண்டின் சிறப்பிற்காகவும், சுதந்திர போராட்ட தியாகிகளின் தன்னலமற்ற சேவையின் மாண்மை போற்றும் விதமாகவும் சிறப்பு ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.
முகாமிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனரும், முதல்வருமான வெங்கடாஜலபதி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தின் கலந்து கொண்டனர்.
ஜிப்மர் ரத்ததான வங்கி யிலிருந்து மருத்துவ குழுவினர் தகுதியுள்ள கொடை யாளர்களை வகைப்படுத்தி 264 யூனிட் ரத்தத்தை பெற்றனர். மாணவ-மாணவிகள் முகாமுக்கு வந்து ரத்த பரிசோதனை செய்து ரத்ததானம் அளித்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் செந்நாடா சங்க அலுவலர் பேராசிரியர் கருணாகரன் செய்திருந்தார்.