என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![பா.ஜனதா பட்டியலின மாநில செயற்குழு கூட்டம் பா.ஜனதா பட்டியலின மாநில செயற்குழு கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/09/1833444-saminathan.webp)
பா.ஜனதா பட்டியலின மாநில செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
பா.ஜனதா பட்டியலின மாநில செயற்குழு கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பா.ஜனதா கட்சியின் மாநில பட்டியல் அணி செயற்குழு கூட்டம் ஏரிப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் ஏரிப்பாக்கம் கூட்ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டியல் அணி மாநில செயற்குழு கூட்டம் மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ. மாநில பா.ஜனதா கட்சி பொதுச் செயலாளர் மோகன்குமார் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் பட்ஜெட்டில் பட்டியல் இன சமூக மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் நலத்திட்டங்களை அமிர்த கால பட்ஜெட்டாக அறிவித்த மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பட்டியலின் செயற்குழு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.