என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அளவிலான குராஷ் தற்காப்பு கலை பயிற்சி
    X

    சான்றிதழுடன் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

    மாநில அளவிலான குராஷ் தற்காப்பு கலை பயிற்சி

    • ஆரோவில் இசையம்பலம் பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவ்ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
    • 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆபத்து காலங்களில் தற்காத்துக்கொள்வது எப்படி? என பயிற்சி அளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கே.ஏ.பி. குராஷ் தற்காப்புக்கலை சங்கம் சார்பில் மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆரோவில் இசையம்பலம் பள்ளியில் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் இளைய நம்பி, ஹானஸ்ட் நைட் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆரோவில் இசையம்பலம் பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவ்ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    புதுவை ஒலிம்பிக் சங்கத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் முத்துகேசவலு, சுங்கத்துறை உதவி ஆணையர் நடராஜன், ஐக்கிய கராத்தே சங்க பொதுச்செயலாளர் வளவன், ஆலங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், மூத்த கணக்காளர் குணசேகரன், ஜூடோ சங்க முன்னாள் தலைவர் பிரதீப்குமார் ஜெயின், சர்வதேச நடுவர் ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் புதுவை மாநிலத்தின் பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆபத்து காலங்களில் தற்காத்துக்கொள்வது எப்படி? என பயிற்சி அளித்தனர். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், விருது வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குராஷ் தற்காப்புக்கலை சங்க தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக்ஆனந்தன் கையொப்பமிட்ட அங்கீகார சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×