search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடைகளை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    வர்த்தக சபை நிர்வாகிகள் டி.ஜி.பி.யிடம் மனு அளித்த போது எடுத்த படம்.

    கடைகளை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • டி.ஜி.பி.யிடம் வர்த்தக சபை நிர்வாகிகள் வலியுறுத்தல்
    • ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை, விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உழவர்கரை பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகம் கட்ட மாமூலாக சிமெண்டு மூட்டை வாங்கித் தாராத காரணத்தால் அந்த நிறுவனம் மீதும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன் தலைமையில் வர்த்தக சபை நிர்வாகிகள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் புதுச்சேரி காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி.ஸ்ரீநிவாசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    மாமூல் கேட்டு பேக்கரி கடை மீதும் அந்த கடையின் ஊழியரை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும் வணிகர்கள் காவல் துறை அதிகாரிகள் இணைந்த ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வர்த்தக சபை துணைத் தலைவர் ரவி, பொதுச் செயலாளர் ஆனந்தன், இணைப் பொதுச் செயலாளர் முகம்மது சிராஜ், பொருளாளர் ரவி, குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், ஜெகதீசன், ராஜவேல், புதுச்சேரி தொழில் வணிகர் கூட்ட மைப்பு தலைவர் கருணாநிதி, பொதுச்செ யலாளர் சதாசிவம், பேக்கரி உரிமை யாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட வர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×