என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஜிப்மரின் கிராம சமுதாய நலவழி மையத்துக்கு மருந்து எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம்
- ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலவழி மையம் உள்ளது.
இங்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளை விரைவாக எடுத்துச்செல்ல ட்ரோன் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி, சிறிய ரக ட்ரோன் விமானம் மூலம் மருந்துகள் கொண்டு செல்லும் சோதனை ஓட்டம் மண்ணாடிப்பட்டு எல்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.
இதில் ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் சிறியரக ட்ரோன் விமானத்தில் அவசரக்கால சிகிச்சைக்கான மருந்துகளை வைத்து அரை மணி நேரத்திற்கு பறக்க வைத்து சோதனை செய்தனர்.
ஜிப்மர் மருத்துவமனையின் தகவல் தொழில்நுட்ப நோடல் அதிகாரி ராஜ்குமார் சித்தரியா, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய முதன்மை மருத்துவ அதிகாரி மணிமொழி உள்ளிட்டோர் சோதனையை பார்வையிட்டனர். கிராம மக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தனர்.