என் மலர்
புதுச்சேரி

பிரெஞ்சு துணை தூதரகத்தில் லேசர் ஒளி இசை நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு

- பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது.
- கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது.
புதுச்சேரி:
பிரான்ஸ்- மேற்கு ஜெர்மனி இடையே போர் நிறுத்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்தம் இரு நாட்டு ஜனாதிபதிகளிடையே பாரீசில் உள்ள எலிசி அரண்மனையில் கடந்த 1963 ஜனவரி 22-ந் தேதி மேற்கொள்ளப்பட்டது.
இந்த எலிசி உடன்படிக்கை ஒப்பந்த தினத்தையொட்டி புதுவையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்தில் லேசர் லைட் ஷோவுடன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரம்பரிய அழகிய பிரெஞ்சு துணை தூதரக கட்டிடம் பல வண்ண லேசர் ஒளி வீச்சுக்களால் மின்னியது. மேலும் கடட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து வானை நோக்கி லேசர் விளக்கு ஒளித்தது. துணை தூதரகத்தினுள் கண் கவரும் பிராங்கோ-ஜெர்மன் எலக்ட்ரோ கச்சேரி நடைபெற்றது.
நிகழ்ச்சியை பிரெஞ்சு துணை தூதர் லிசே டால் போட் பாரே தொடங்கி வைத்தார். இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர்கள், புதுவையில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை மக்கள் பலரும் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.