என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தி அளித்துள்ளது: முதல்-அமைச்சர் ரங்கசாமி
- எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
- அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதிதோறும் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை. இலவச அரிசி கொடுங்கள் என எல்லா இடத்திலும் தாய்மார்கள் கேட்டுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸ் அரசின் கொள்கை மாநில அந்தஸ்து புதுவைக்கு வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சியையும் எங்கள் அரசு எடுக்கும்.
எங்கள் அரசின் செயல்பாடுகள் புதுவை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேர்தலுக்காக நாங்கள் புதிதாக எந்த வியூகமும் அமைக்க வேண்டியதில்லை. புதுவை அரசு சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுவை மாநிலத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம்.
எனவேதான் பா.ஜனதா வேட்பாளருக்கு கூட்டணியில் தொகுதியை வழங்கினோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எனது ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்