என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
- திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார்.
புதுச்சேரி:
திருவண்டார் கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்டார்கோவிலில் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தார். மொத்தம் 145 கிராம் கஞ்சாவை அவர் பதுக்கி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்டார்கோவில் சின்னபேட் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்த ஸ்டாலின்(வயது37) என்பதும், இவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.






