search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தென்பெண்ணையாற்றில்  நீர் வரத்து குறைந்தது
    X

    கொமந்தான்மேடு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கு குறைந்து தடுப்பு கட்டைகள் தெரிகிற காட்சி.

    தென்பெண்ணையாற்றில் நீர் வரத்து குறைந்தது

    • தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    தமிழக, கர்நாடக எல்லையில் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்தும் தென்பெண்ணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    தென்பெண்ணை ஆற்றில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து சொர்ணவூர் அணைக்கட்டுக்கு தற்போது 4000 கன அடி நீர் வருகிறது. அனைத்து நீரும் கடலில் கலக்கிறது. ஆனாலும், தென்பெண்ணை கரையோர மக்களுக்கு தொடர்ந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கால் சித்தேரி மற்றும் கொமந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கி இருந்த நிலையில் தற்போது நீர் வடிந்து வருகிறது. மேலும் கொமந்ததான் மேடு தரைப்பாலத்தில் பாலத்தை இணைக்கக் கூடிய மண் சாலை அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தண்ணீர் அளவு குறைந்தால் தரை பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியுமா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

    தென்பெண்ணை சொர்ணாவூர் அணைக்கட்டிலிருந்து பங்காரு வாய்க்கால் மூலம் பாகூர் ஏரிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 3 மீட்டர் உயரமுள்ள பாகூர் ஏரி தற்போது 2.10 மீட்டருக்கு நிரம்பி உள்ளது. மேலும் சில நாட்களில் பாகூர் ஏரி நிரம்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×