என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பாலத்தின் இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்குட்டி
- 1 மணி நேரம் போராடி மீட்ட போலீசார்
- பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது.
புதுச்சேரி, நவ.13-
புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் முழபிலாங்காடு பைபாஸ் சாலை உள்ளது.
இந்த சாலையில் உள்ள பாலத்தின் இடுக்கு சந்தில் நாய்க்குட்டி ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் ஒலமிட்டபடி இருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் நாய்குட்டியை மீட்க முயன்றனர்.
ஆனால், பாலத்தின் இடையே ,தலையை மாட்டிக் கொண்டு கால்கள் கீழே தொங்கியவாறு நாய்குட்டி இருந்தது. இதனால் எத்தனை முயற்சி செய்தும் அவர்களால் நாய்க்குட்டியை மீட்க முடியவில்லை இதனையடுத்து பள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அப்பகுதியினர் உதவியுடன் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோமன், காவலர் ஜீஜேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் போராடி கடும் முயற்சிக்குப் பிறகு சிறு கீறல் கூட இல்லாமல் நாய்க்குட்டியை மீட்டனர்.
வெளியே வந்தவுடன் மகிழ்ச்சியில் நாய்க்குட்டி துள்ளி குதித்து ஓடியது.
நாய்க்குட்டிக்காக அதிக அக்கறை எடுத்து மீட்ட பள்ளூர் போலீசாருக்கு புதுவை மற்றும் கேரள மாநிலத்தில் பாராட்டுக்கள் குவிகிறது.