search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நோணாங்குப்பத்தில் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
    X

    நோணாங்குப்பத்தில் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

    நோணாங்குப்பத்தில் காத்திருந்து படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

    • கூடுதல் படகுகள் இயக்கப்படுமா?
    • சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு ஏராளமானோர் வருகின்றனர்.

    படகுகள் மூலம் பயணித்து பேரடைஸ் தீவுக்கு சென்று கடலில் விளையாடி மகிழ்வதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். கோடை விடுமுறை என்பதால் கடந்த மாதம் முழுவதுமே புதுவைக்கு குடும்பம், குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.

    ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதல் படகுகள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பேரடைஸ் தீவில் படகு நிறுத்தும் இடம் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.

    இதையடுத்து பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், 100 பேர் நின்றாலும், சரியாத கையில் பலமான படகு தளம் அமைக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து படகுகளை சரிவர இயக்காமல், தனியார் படகு குழாமிற்கு ஆதரவாக ஊழியர்கள் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால் மீண்டும் அமைச்சர் லட்சுமிநாராயணன் படகு குழாமில் திடீர் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். படகுகளை சீரமைத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கோடை விடுமுறையான என 2 நாட்களில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து படகு சவாரி மூலம் ரூ.16 லட்சம் வருமானம் வந்துள்ளது.

    போதிய படகுகள் இல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாத நிலையிலும் ரூ.16 லட்சம் 2 நாளில் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.

    கோடை விடுமுறை முடிந்தாலும் வார விடுமுறை, பண்டிகை நாட்களில் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிவர். எனவே அரசு கூடுதல் படகுகளை இயக்கவும், சுற்றுலா பயணிகள் காத்திருக்காமல் பயணம் செய்யவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×