என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பூரணாங்குப்பத்தில் அய்யப்ப சாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
- கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
- விழாவில் பொதுமக்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பத்தை அடுத்த பூரணாங் குப்பம் கிரா மத்தில் பம்பா வாசன் அய்யப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கார்த்திகை மாத முதல் சனிக்கிழமையன்று இரவு சிறப்பு பூஜைகளும் ஊஞ்சல் உற்சவம் உற்சவம் நடை பெற்றது.
அதனைத் தொடர்ந்து மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளா கத்தில் அய்யப்ப பக்தர்கள் இணைந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி, பம்பாவாசன் ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்த னர். விழாவில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
Next Story






