search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களுக்கு வேட்டி, துண்டு-அன்னதானம் - சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
    X

    அரிச்சுவடி மனநல மைய சேர்மன் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.

    பொதுமக்களுக்கு வேட்டி, துண்டு-அன்னதானம் - சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்

    • ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.
    • பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரிச்சுவடி மனநலமைய சேர்மன் பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் அரவிந்தன் மணவெளி ஊர் முக்கியஸ்தர்கள் காமராஜ், கணேஷ்குமார், கணேசன், செல்வம், சதீஷ், ஆனந்தன், நடராஜன், விஜயகணபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் சதீஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆத்திசூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் அரிச்சுவடி டிரஸ்டி அரசம்மா தேவி ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×