என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தென்மாநில கவுன்சில் கூட்டத்தில்   ரங்கசாமி கலந்து கொள்ளாதது ஏன்? அன்பழகன் கேள்வி
    X

    கோப்பு படம்.

    தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ளாதது ஏன்? அன்பழகன் கேள்வி

    • தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
    • அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும்.

    புதுச்சேரி:

    தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் ரங்கசாமி கலந்து கொள்ள கவர்னர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று புதுவை கிழக்கு மாநிலஅ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவனந்தபுரத்தில் தென் மாநில முதல்-அமைச்சர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா என அந்தந்த மாநில முதல்-அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுப்பினராக இருந்தும் அவர் கலந்து கொள்ளாமல் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    யூனியன் பிரதேசமான கவர்னருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும் முதல்- அமைச்சருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது கவர்னரின் தலையாய கடமையாகும். இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் கவர்னர், முதல்-அமைச்சர் கலந்துகொள்ள லாம் என அனுமதிக்க ப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர், கவர்னர் கலந்து கொள்ள லாம் என விதி இருந்தும், சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் விதத்தில் கவர்னர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சருக்கு உரிய உரிமையை நிலை நாட்டும் விதத்தில் கூட்டத்தில் கவர்னர் செல்வதை தவிர்த்து முதல்-அமைச்சரை கலந்து கொள்ள தெரிவித்திருக்கலாம்.

    தமிழகத்தில் இருந்து புதுவைக்கு காவிரி தண்ணீர், விமான நிலையம் நில ஆர்ஜிதம், தமிழகத்தில் இருந்து காரைக்காலுக்கு மணல் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து கவர்னர் தமிழிசை பேசியுள்ளார். இதில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதல்-அமைச்சரிடம் நேரிடையாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

    யூனியன் பிரதேசமாக புதுவை இருந்தும் மாநில அந்தஸ்து உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நிதியுதவி 60-40 ஆக உள்ளதை யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசின் ஊக்குவிப்பு நிதியாக நமக்கு 100 சதவீதமும் வழங்க வேண்டும்.

    அதையும் நீங்கள் வழங்கு வதில்லை என்பதையும், தான் பா.ஜனதாவின் ஆதரவில் கவர்னராக இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரிடையாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரது தைரியமான செயல் என்பது பாராட்டுக்குரியது ஆகும். சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் கவர்னர் கலந்து கொண்டது மற்றும் முதல் அமைச்சர் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்க இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×