search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பது ஏன்?
    X

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    ஹெல்மெட் அணியாதவர்களிடம் அபராதம் விதிப்பது ஏன்?

    • புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
    • போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதனால் தினந்தோறும் சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தும், உறுப்புகளையும், உயிரையும் இழந்து வருகின்றனர். இந்நிலையில், குண்டும் குழியுமான சாலையை செப்பனிட தவறிய புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்களை கண்டித்தும், அவர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு பெருமாள் கண்டன உரையாற்றினார். மாநில குழு கலியன், கொம்யூன் குழு வடிவேலு, கவுசிகன் கன்னியக்கோவில் கிளை செயலாளர் வீரப்பன், வெங்கடேசன், சண்முகம், கல்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுவை-கடலூர் சாலை மற்றும் பாகூர் கொம்யூனுக்கு உட்பட சாலைகள் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குண்டும் குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். சாலையில் சீரமைக்கப்படாமல் இரு சக்கர வாகனத்தில் வருப வர்களிடம் ஹெல்மெட் கட்டாயம் என்று அபராதம் விதிப்பது ஏன்?

    குண்டும், குழியுமான சாலையால், வாகன ஓட்டிகளுக்கு, உடல் நலக் கோளாறு, விபத்து ஏற்படுகிறது.

    இதற்கு காரணமான புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரிடம் அளித்தனர்.

    Next Story
    ×