என் மலர்
ராசி பலன்
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டனர்.
- முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
வாரவிடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவில், அடிவாரம் மற்றும் கோவிலுக்கு செல்லும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இதனால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் மின்இழுவை ரெயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதில் பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் முருகனை வழிபட்டனர். திருஆவினன்குடி கோவில் பகுதியில் உள்ள நிலையத்தில் முடிக்காணிக்கை செலுத்த பக்தர்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி, பாதவிநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.