என் மலர்
ஷாட்ஸ்

X
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
By
மாலை மலர்3 Oct 2023 10:42 AM IST (Updated: 3 Oct 2023 10:49 AM IST)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம். இந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் காலால் எட்டி உதைத்து தாக்கினார். இதில் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார். விவசாயியை எட்டி உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் தலைமறைவாகி உள்ளார். இரவு முழுவதும் தேடியும் தங்கப்பாண்டியன் கிடைக்காத நிலையில் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X