search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது ". Dushyant Chautala"

    • யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.
    • இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது

    அரியானாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக தனித்துக் களம் காண்பதாக காங்கிரஸ் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து ஆம் ஆத்மி இந்த முடிவை அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி மூத்த தலைவரும் எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதலவர் பகவத் மான் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

     

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில் அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களை கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியை பிடித்தது.

    ஆனால் இடையிலேயே பாஜகாவுக்கான ஆதரவை ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா முறித்துக்கொண்டார். சில சுயேச்சைகளும் பாஜகவுடனான ஆதரவை விலகிக் கொண்டு காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ளதால் தற்போது ஸ்திரத்தன்மை இலலாமல் அரியானாவில் பாஜக ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில்தான் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக ஆதரவை முறித்துக்கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் கடந்த தேர்தலைப் போல தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. எனவே பாஜக - காங்கிரஸ் - ஆம்ஆத்மி-ஜேஜேபி ஆகிய நான்கு கட்சிகளின்  முனை போட்டி  இந்த சட்டமன்றத் தேர்தலில் உருவாகியுள்ளது. 

    ×