என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 32
நீங்கள் தேடியது "32 பயங்கரவாதிகள் பலி"
ஆப்கானிஸ்தான் நாட்டின் 3 மாகாணங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 24 மணி நேரத்தில் 32 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghanforces #Talibanfighters
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
ஃபர்யாப் மாகாணத்தின் கைசர் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கிழக்கு கஸ்னி மற்றும் மேற்கு பட்கிஸ் மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களின் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanforces #Talibanfighters #Afghanfighting

இந்நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மரூஃப் மற்றும் ஷோராபக் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 16 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஃபர்யாப் மாகாணத்தின் கைசர் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கிழக்கு கஸ்னி மற்றும் மேற்கு பட்கிஸ் மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களின் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Afghanforces #Talibanfighters #Afghanfighting
டெல்லியில் 32 கோடி ரூபாய் மதிப்பில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து நைஜீரியன் உள்பட 2 பேரை கைது செய்தனர். #DelhiMetro #Heroin
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் சாகேத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் போதை பொருள் கடத்தப்படுவதாக டெல்லி போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, டெல்லி போலீசார் இன்று அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில் 8 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 32 கோடி ரூபாய் மதிப்புடையது.
இதையடுத்து, அவர்கள் கடத்தி வந்த 8 கிலோ ஹெராயினை டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெராயினை கடத்தி வந்த ஆஸ்கார் என்ற நைஜீரிய நாட்டு ஆசாமி உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். #DelhiMetro #Heroin
கடந்த 6 ஆண்டுகளில் செம்மரம் கடத்த முயன்றதாக 11 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். #RedSandersSmuggling
ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவதற்கு, செம்மரக்கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
2015-ம்ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி செம்மரம் கடத்த முயன்றதாக 20 தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
2013-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி ஆந்திர வனத்துறை அதிகாரிகள் 2 பேர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு தமிழகத்தை சேர்ந்த கும்பல் தான் காரணம் என ஆந்திர போலீசார் முடிவு செய்தனர். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 287 பேர் உள்பட 349 பேரை கைது செய்து ஆந்திர ஜெயிலில் போலீசார் அடைத்தனர். ஆதாரம் இல்லாததால் திருப்பதி சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
தமிழர்கள் விடுதலைக்கு ஆந்திர மாநில போலீசாரும், வனத்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரத்தில் 287 தமிழர்களை தவிர்த்து மற்ற கைதிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் விடுதலைக்கு ஆந்திர போலீசார் எதிர்ப்பை துளியும் காட்டவில்லை.
ஆந்திர போலீசார் தமிழர்கள் என்றாலே செம்மரக் கடத்தல் கும்பல் என்ற கண்ணோட்ட பார்வையை திணித்து கைது நடவடிக்கை எடுக்க தொடங் கினர்.
கடந்த பிப்ரவரி 18-ந் தேதி கடப்பா ஒண்டிமிட்டா ஏரியில் இடுப்பு அளவு தண்ணீரில் 5 தமிழர்கள் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக தொழிலாளி திருவண்ணாமலை மாவ ட்டம் ஜவ்வாதுமலை கானா மலை கிராமத்தை சேர்ந்த காமராஜ் (53) ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளில் செம்மரம் கடத்த முயன்றதாக 11 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. இதில் 31 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் தமிழர்கள் தான் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். தற்போது, 12-வது முறையாக என்கவுண்டர் நடத்தப்பட்டு உள்ளது. இவரையும் சேர்த்து 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
செம்மரக்கடத்தல் வழக்கில் ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரில், 2 ஆயிரம் பேர் தமிழர்கள் எனவும் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரது மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #RedSandersSmuggling

பணிக்கு சேர்ந்த முதல் நாளில் 32 கி.மீ நடந்த இளைஞரின் கதையை கேட்ட முதலாளி கார் ஒன்றை பரிசளித்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிரிமிங்ஹாம் நகர் அருகே உள்ள பெல்ஹாம் நகரைச் சேர்ந்தவர் வால்டர் கார் (22). கல்லூரியில் படித்து வரும் இவருக்கு பிரிமிங்ஹாமில் உள்ள பெல்ஹாப்ஸ் எனும் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்துள்ளது.
அந்த நிறுவனத்திற்கு அவர் போக வேண்டும் என்றால் 32 கி.மீட்டர் தொலைவை கடக்க வேண்டும். ஆனால் சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட காத்தரீனா புயலின் காரணமாக இளைஞனின் வீடு தரைமட்டமாகியுள்ளது.
இதனால் வால்டர் புதிய வீட்டில் தன் தாயுடன் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நேரத்தில் வேலையும் கிடைத்ததால் முதல் நாள் பணிக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் நடந்து சென்றால் 32 கி.மீட்டரை காலையில் அடைந்துவிடலாம் என்று நடக்கத் துவங்கியுள்ளார்.
அதிகாலை நேரத்தில் வால்டர் தனியாக நடந்து சென்றதை கவனித்த ரோந்து பணியில் இருந்த போலீசார், அழைத்து விசாரித்துள்ளனர். அவர் நடந்தவற்றை கூற, அவர் மீது இறக்கப்பட்ட போலீசார், சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போதைக்கு இங்கிருக்கும் தேவாலயத்தில் தூங்கு என்று கூறி தங்கவைத்துள்ளனர்.
அதன் பின் காலையில் போலீஸ் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்ற போது, தங்களின் தோழியான லேமே என்பவர் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர்.ஏனெனில் அப்பெண் பிரிமிங்ஹாம் நகருக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருவதால், அவரின் காரில் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அந்த பெண் வால்டரின் கதையைக் கேட்டு நெகிழ்ந்து போய் அந்த நிறுவனத்தின் முதலாளியும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க்லினிடம் கூறி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த நிறுவனத்தின் முதலாளி, தான் பயன்படுத்திய காரை வால்டருக்குப் பரிசாக அளித்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வால்டர் உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்ணீர் வடித்துள்ளார். இதையும் லேமே தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, பலரும் நிறுவனத்தின் முதலாளி மற்றும் வால்டருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 32 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கி பிடித்தனர்.
கொல்கத்தா:
சீனாவில் இருந்து சிக்கிம் வழியாக தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்காளத்தில் வருவாய் பிரிவினர் தீவிர ரோந்து பணியில் இன்று ஈடுபட்டனர்.
அப்போது செவோக் பகுதியில் காரில் தங்கம் கடத்த முயன்ற 3 பேரை வருவாய் புலனாய்வு பிரிவினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையில், தங்கம் கடத்தியவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அக்ஷய் மகர், தானிஜி சாகேப் பாபர் மற்றும் பிரவீன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். #Tamilnews
×

X