என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 36 year old
நீங்கள் தேடியது "36- Year- Old"
சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த 36 வயது இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple #KeralaWomen
திருவனந்தபுரம்:
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் இளம்பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் புதுயுக கேரளம் என்ற முகநூல் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டமைப்பின் உதவியுடன் சபரிமலையில் கொல்லத்தை சேர்ந்த இளம்பெண் சாமி தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு சார்பில் முகநூலில், ‘கொல்லம் மாவட்டம் சாத்தனூரை சேர்ந்த மஞ்சு(வயது 36) கடந்த 8-ந் தேதி காலை 7.30 மணியளவில் இருமுடி கட்டுடன் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு சென்று நெய்யாபிஷேகம் உள்பட பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது குறித்து மஞ்சு கூறும்போது, ‘நான் கடந்த 8-ந் தேதி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தேன். சபரிமலை செல்வதற்கு போலீசில் அனுமதி எதுவும் பெறவில்லை. ஆதலால் போலீசாரின் பாதுகாப்பு எதுவும் இன்றி, பக்தர்களின் எதிர்ப்பில்லாமல் 18-ம் படி வழியாக சென்று தரிசனம் செய்து திரும்பினேன். சாமி தரிசனம் செய்ய எனக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோ காட்சி விரைவில் வெளியிடப்படும்’ என்றார். ஆனால் இந்த தகவலை கேரள அரசோ, போலீஸ் துறையோ உறுதி செய்யவில்லை. #SabarimalaTemple #KeralaWomen

×

X