என் மலர்
நீங்கள் தேடியது "6 People missing"
- தேனியில் மாணவி உள்பட 6 பேர் மாயமானது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டி 1வது வார்டு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நித்ரா (வயது 16). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்த நித்ரா சம்பவத்தன்று ஸ்கூல் பேக்குடன் பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்ற அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்தமபாளையம் 3வது வார்டு பழைய கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன் கிருத்திக் செல்வா (20). இவர் சம்பவத்தன்று சர்ச்சுக்கு செல்வதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியைச் சேர்ந்த சுந்தரம் மகள் திவ்யா (வயது 24). இவர் கடந்த சில மாதங்களாக பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் உள்ள சுந்தரம் வீட்டில் தங்கி இருந்தார். திடீரென வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம் 4வது வார்டு இ.பி.காலனியைச் சேர்ந்த மாடசாமி மனைவி கவுசல்யா. இவர்களுக்கு சந்துரு (3), சங்கவி (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தடுப்பூசி போட்டு வருவதாக தனது மாமியாரிடம் கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது கணவன் உத்தமபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள பாலப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்னையா மகள் மீனா. இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள ஒட்டுப்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் முத்துலெட்சுமி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- கூலித்தொழிலாளி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மாயமாகினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது63). கூலித்தொழி லாளி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்ற னர்.
பழனிசெட்டிபட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). மகள்கள் பவித்ரா (13), கிருபா (12), சம்பவத்தன்று ரவிக்குமார் வேலைக்கு சென்று விட்டார். மாலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகள்கள் மாயமாகி இருந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்ப ட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே கும்பக்கரை பிரிவு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி மனைவி கோகிலா (21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.
இந்த நிலையில் கோகிலா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம்
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது விடுமுறை என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராச்சாமியை தேடி வருகின்றனர்.






