search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "69 Percent Reservation"

    • தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.
    • 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 1980-ம் ஆண்டு முதல் 68சதவீத இட ஒதுக்கீடும், 1989-ம் ஆண்டு முதல் 69சதவீத இட ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளன. இதற்கிடையே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தினேஷ் என்பவர் புதிய வழக்கை தொடர்ந்திருப்பதால் இந்த விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    மாராத்தா இட ஒதுக்கீடு செல்லாது என்று 2021-ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் மீதான சீராய்வு மனு கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப் பட்டு விட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனு இம்மாதம் 8-ந்தேதி கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் தனிப்பெரும் அடையாளங்களில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அந்த கடமையை நிறைவேற்றும் வகையில், இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #69PercentQuota
    புதுடெல்லி:

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது இடைக்கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.



    இதற்கிடையே தமிழகத்தில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால் தங்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி இரண்டு மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

    இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்டுள்ள மூல வழக்கு நவம்பர் மாதம் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt #69PercentQuota

    ×