search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "90.25 percent pass"

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தஞ்சை மாவட்டத்தில் 90.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாசினி, பிளஸ் -2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 13,116 மாணவர்கள் எழுதினர். இதில் 11,212 பேர் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் 16,131 மாணவிகள் எழுதியதில் 15, 183 பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்டத்தில் மொத்தம் 29,247 பேர் எழுதினர். இதில் 26, 395 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90.25 சதவீத தேர்ச்சி ஆகும்.

    அதாவது மாணவர்களில் 85.48 சதவீத பேரும், மாணவிகளில் 94.12 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடந்த ஆண்டில் தஞ்சை மாவட்டம் பிளஸ்- 2 தேர்வில் 92.47 சதவீத தேர்ச்சி பெற்றது. இந்தாண்டு கடந்தாண்டை விட 2.27 சதவீதம் தேர்ச்சி குறைவாக பெற்றுள்ளது.

    இதேபோல் கடந்தாண்டு தேர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் 19-வது இடம் பெற்றது. இந்தாண்டு 20-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகள் உள்ள மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 84.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தில் 1180-க்கு மேல் ஒரு மாணவி மதிப்பெண் பெற்றுள்ளார். 1151-1180 வரை 40 பேரும், 1126-1150 வரை 147 பேரும், 1101 -1125 வரை 245 பேரும், 1001 முதல் 1100 வரை 99 பேரும், 901 முதல் 1000 மதிப்பெண் வரை 3261 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தவமணி பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    இதில் மொத்தம் பிளஸ்-2 தேர்வை 14,235 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 4920, பெண்கள் 7241 பேர் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 12161 பேர் ஆகும். இது 85.49 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டை விட 3.28 சதவீதம் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் 24-வது இடத்தை திருவாரூர் மாவட்டம் பிடித்துள்ளது.

    நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 85.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டில் 17 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 438 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்ச்சியை விட இந்த ஆண்டு 2.11 சதவீதம் பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #Tamilnews
    ×